Kishore Kumar Hits

Shashaa Tirupati - Naan Pizhai (From "Kaathuvaakula Rendu Kaadhal") текст песни

Исполнитель: Shashaa Tirupati

альбом: Naan Pizhai (From "Kaathuvaakula Rendu Kaadhal")


நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
அடி அழகா சிரிச்ச முகமே
நான் நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன், oh...
அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன்
அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன்
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
அடி அழகா சிரிச்ச முகமே
நான் நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители