தோற்றம் மாறும் மேகமும் வடிவமில்லா நெய்தலும் வெவ்வேறு நீளம் கொண்ட மரங்களும் சமச்சீரற்ற குறிஞ்சியும் சரிசமம் இல்லா செடிகளும் அழகாய் தெரியும் மனிதனுக்கு எடை பெருக்காகவும் உடை அழுக்காகவும் நிறம் குறையாகவும் குறை பெரிதாகவும் தெரிகிற காட்சிக்கோணம் கண்ணின் வியாதியோ மனிதனின் வியாதியோ தெரிகிற காட்சிக்கோணம் மனிதன் வியாதியோ மனதின் வியாதியோ மனம் மனம் மனம் மனம் ஒரு கண்ணாடி கண்டது தெரியும் கண்டிறாததும் தெரியும் நினைவலை தோன்றும் தருணம் நிகழ்காலம் மறையும் உடனே மனம் மனம் மனம் மனம் அது கட்டிப்போட்டாலும் மனம் மனம் மனம் மனம் அது குழப்பிப்போட்டாலும் மனம் மனம் மனம் மனம் அது சுத்திப்போட்டாலும் மனம் மனம் மனம் மனம் வெறும் கண்ணாடி குரங்குப்போல் குட்டிக்கரணம் அடிக்காமல் பருந்து போல் பறக்க ஆசை எதை பார்ப்பது எதை தவிர்ப்பது தடை உடைப்பது செயல் முனைப்பது உடல் உழைத்தது திறன் கொடுத்தது இவை அனைத்துமே வழி வகுத்தது அது கடக்கட்டும் கண்ணாடி சில நாள் மறையும் ஒரு நாள் உடையும் மனம் மனம் மனம் மனம் அது உடையட்டும் மனம் மனம் மனம் மனம் அது நொறுங்கட்டும் மனம் மனம் மனம் மனம் அது மறையட்டும் மனம் மனம் மனம் மனம் அது நொறுங்கட்டும்