Kishore Kumar Hits

Prakash Nikki - Adiye Un Kangal текст песни

Исполнитель: Prakash Nikki

альбом: Rowthiram (Orignal Motion Picture Soundtrack)


அடியே உன் கண்கள் ரெண்டும் made in Cuba'வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro'வா
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasa'வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா
ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க
ஆராய்ச்சி கூடம் போல கண்ணை மாற்றாதே
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே
அடியே உன் கண்கள் ரெண்டும் made in Cuba'வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro'வா
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasa'வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா

ஆள் கொள்ளும் சேனை கொண்ட ஆயுதங்கள் ஏந்திக் கொண்ட
ஆரம்பித்த யுத்தம் ஒன்று பின்னால் நின்று தாக்காதே
மாவீரா முன்னால் நின்று உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயம் ஆகிப் போகாதே
மறைவேனா நானே நான் தீயை தின்று வாழும் பச்சி
போடி சும்மா வத்தி குச்சி
விடுவேனா நானே நான் கொஞ்சிக் கொஞ்சிக் கொள்ளும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப் பச்சி
வேட்டைக்காரி காதல் காட்டில் நாளை மீழும் வேங்கை ஆட்சி
பதுங்காமல் என் மீது பாயும் புலி போல ஆகாதே நீயும்
கிளி போல ஆனேனே நானும்
யாழும் வாளும் மோதாமல் மோதும்
ஏ அடியே உன் கண்கள் ரெண்டும் made in Cuba'வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro'வா
ஹே அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasa'வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா

நூற்றாண்டு காலம் முன்பு மூழ்கிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே என்று வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே
ஏகாந்த தீவில் இன்று ஏவாள் போல ஏஞ்சல் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று காற்றும் சொல்லக் கேட்டேனே
Amazon காடு நாம் ரெண்டே ரெண்டு பட்டாம் பூச்சி
ஆடிப் பார்ப்போம் கண்ணா மூச்சி
ஆரோவில் வீடு வா தங்கக்கட்டி செங்கல் வச்சி
தங்கும் ஆசை வந்துடுச்சி
நீ நீலக் கண்ணால் பாலம் போட்டாய் தூக்கம் போயே போச்சு
ஓ விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோட்டம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க
அடியே உன் கண்கள் ரெண்டும் made in Cuba'வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro'வா
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasa'வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители