கனவே நீ காயம் கண்ட தேனோ நினைவில் தடுமாற்றமானதோ உயிரே நீ பிரிந்து சென்ற தேனோ மனதில் சிறு வலியை கண்டதோ உன் வாசம் வந்த கணத்தில் என் உயிரை உணர்ந்த கணத்தில் உன் வாசம் மீண்டும் என்னைக் கடந்து உயிரை பறித்து போனது வலிகள் பல மடங்கானதே மனதின் கனம் ரணமானதே கடலில் இருக்கும் மீன்கள் கரையை சேர கனவா அந்தக் கரையை சேர முயன்றால் உயிர் வாழுமா என் நிலைமை என்ன தெரிந்தும் உன் மனதை சேர கனவா அந்தக் கனவு கலைந்த பிறகும் உயிர் வாழ்வேனா உன் விழி சேர நினைத்தேன் கரம் கோர்க்க நினைத்தேன் உன் மடி மீது தலை சாய நினைத்தேன் காலங்கள் முழுதும் அன்பெனும் நிழலில் நாம் சேர்ந்து வாழ்ந்திட நினைத்தேன் நீ விரும்பும் ஒரு மனம் வேறொவருடையதால் எதிர்பார்த்த என் மனம் அது நொறுங்கி உடைந்தது இருந்தும் என் விழியில் சிறு இன்பம் காண்கிறேன் எதிர்பார்த்த எந்தன் நாட்கள் நான் காத்திருந்த நொடிகள் இன்று காற்றில் கலந்து போனால் உயிர் வாழ்வேனா கடலில் இருக்கும் மீன்கள் கரைசேர கனவா அந்தக் கரையை சேர முயன்றால் உயிர்வாழுமா என் நிலைமை என்ன தெரிந்தும் உன் மனதை சேர கனவா அந்தக் கனவு கலைந்த பிறகும் உயிர் வாழ்வேனா கனவே நீ காயம் கண்ட தேனோ நினைவில் தடுமாற்றமானதோ