Kishore Kumar Hits

A.R. Rahman - Margazhi Thingal Allava текст песни

Исполнитель: A.R. Rahman

альбом: Wonders of A.R. RAHMAN


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்
என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
தரிதரிகடீம் தீம் தீம் ஜம் தகி தகிட தா
திதா திதா ஜனு தரிஜம் தகதிம் தகிட்ட தா
ஜனு தகிட்ட தா தீம் தா தகிட தீம் தா தக்கி தரிகிடதம் தா
தக்கி தரிகிடதம் தா தம் தாம் தகிட தோம்
தகிட தீம் தாம் தகிட தோம் தீம்
தகிட தீம் தாம் தகிட தோம் தகிட தீம்

சூடித் தந்த சுடர்க்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று
நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி ஆஆஆ
ஜோதி எப்படி
ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி
ஜோதியை எரிக்கும் வா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா (மார்கழித் திங்களல்லவா)
மதிகொஞ்சும் நாளல்லவா (ஆ)
இது கண்ணன் வரும் பொழுதல்லவா (ஆ)
மார்கழித் திங்களல்லவா (ஆ)
மதிகொஞ்சும் நாளல்லவா (ஆ)
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители