சுத்தியுள்ள ஊர்களுக்கும் சொந்தக்கார ஜனங்களுக்கும் காவலுக்கு வந்திருக்கும் காக்கிச்சட்டைக்காரருக்குஉஉம் ஓட்டை இல்லா கொட்டகையை ஒழுங்காப் போட்டவருக்கும் மண்டையைப் பொளக்கச் செய்யும் மைக்செட்டு காரருக்கும் எங்களோட வணக்கமுங்க இது எருது கட்டு வணக்கமுங்க ஹே, எட்டு திசையும் கொட்டு குலவையும் முட்டி முழங்கிடும் திருவிழா எட்டத் திரிஞ்ச ரத்த சொந்தங்களும் ஒண்ணு கலந்திடும் திருவிழா ஆவன்னா பொக்குளம், கே பாரபட்டி தெங்கல்பட்டி, சிக்கம்பட்டி ஒட்டம்பட்டி, அய்யம்பாட்டி நாங்க ஆறூரு காரங்க அந்த பேர்காமன் பேரங்க நாங்க ஆறூரு காரங்க அந்த பேர்காமன் பேரங்க தந்தானே தந்தனத்தந்தானே தானே தானே தந்தானே தந்தனத்தந்தானே தானே தானே தந்தானே தந்தனத்தந்தானே தானே தானே தந்தானே தந்தனத்தந்தானே தானே தானே வாடிப்பட்டி கொட்டுக்குத்தான் வாங்கிப் போட்டு குத்துங்கடா வணக்கம்பட்டி பெல்ட்டு போட்டு வானத்தையே முட்டுங்கடா வாடிப்பட்டி கொட்டுக்குத்தான் வாங்கிப் போட்டு குத்துங்கடா வணக்கம்பட்டி பெல்ட்டு போட்டு வானத்தையே முட்டுங்கடா ஆளு தோறும் இருந்திடுமே அய்யனாரு வாளுதான்டா அன்னி தன்டா வெச்சிடுவார் பூமியில காலுதான்டா குறைச்சலுன்னு ஒண்ணும் இல்லை கொஞ்ச வேலைதான் குடுத்துதவும் எண்ணத்துல சிகரம் போலதான் குறைச்சலுன்னு ஒண்ணும் இல்லை கொஞ்ச வேலைதான் குடுத்துதவும் எண்ணத்துல சிகரம் போலதான் நாங்க ஆறூரு காரங்க அந்த பேர்காமன் பேரங்க நாங்க ஆறூரு காரங்க அந்த பேர்காமன் பேரங்க எட்டு திசையும் கொட்டு குலவையும் முட்டி முழங்கிடும் திருவிழா எட்டத் திரிஞ்ச ரத்த சொந்தங்களும் ஒண்ணு கலந்திடும் திருவிழா (குலவை சத்தம்) (குலவை சத்தம்) ஏ தன்னானே தானேனன்னே தன்னானே தானேனன்னே தானானே தந்திருதானே தானானே தந்திருதானே தானானே தந்திருதானே தானானே தந்திருதானே கொடிமங்கலம் மண்ணெடுத்து குதிரை செஞ்சோம் பாருங்க எட்டு வேலை குடை பிடிச்சு எட்டு வைக்கும் ஊருங்க (விசில் விசில் விசில் விசில்) ஏ கொடிமங்கலம் மண்ணெடுத்து குதிரை செஞ்சோம் பாருங்க எட்டு வேலை குடை பிடிச்சு எட்டு வைக்கும் ஊருங்க காடு கரை காப்பாத்த கரம்பை அள்ளித் தின்னவரு காணி ஆழ மண்ணுலதான் கடைசிவரை நின்னவரு ஏ மோசம் செஞ்சா மூக்கு மேல கோவம் வந்திரும் பாசம் காட்டி நின்னு பாரு உசுர தந்திடும் ஏ மோசம் செஞ்சா மூக்கு மேல கோவம் வந்திரும் பாசம் காட்டி நின்னு பாரு உசுர தந்திடும் நாங்க ஆறூரு காரங்க அந்த பேர்காமன் பேரங்க நாங்க ஆறூரு காரங்க அந்த பேர்காமன் பேரங்க ஹே, கொக்குளத்து பெரிய மந்தை எங்களுக்கு கோர்ட்டுதான் தப்பைக் கண்டா பொண்ணுகளும் கத்திகளைத் தீட்டும்டா கொக்குளத்து பெரிய மந்தை எங்களுக்கு கோர்ட்டுதான் தப்பைக் கண்டா பொண்ணுகளும் கத்திகளைத் தீட்டும்டா பெண்மக்கமார்களுக்கு பேரளவு துயரங்கண்டா கேட்காம கருப்பசாமி பறை போலப் புறப்படும்டா ஹே, எல்லை ஏதும் இல்லை இங்கே வெறும் கோடுதான் ஆறூரும் எங்களுக்கு ஒரு வீடுதான் எல்லை ஏதும் இல்லை இங்கே வெறும் கோடுதான் ஆறூரும் எங்களுக்கு ஒரு வீடுதான்