Kishore Kumar Hits

Kaber Vasuki - Pularum текст песни

Исполнитель: Kaber Vasuki

альбом: Dharala Prabhu (Original Motion Picture Soundtrack)


புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ
உலரும் நாளில்
மழை தூறிடும் ருதுவோ
மனதை சூழும் நோய் நீக்கும்
ஒளியாய் வந்தாயே
மழலை சொல்லில்
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே
மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி...
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி இனி...

காற்றில் நீ கை அசைத்தால்
ஓவியம் தோன்றுதே
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்
கவிதை ஆகுதே
நான் உன்னை தோளில் தூக்க
பாரங்கள் தீருதே
நாளையும் வாழ வேண்டும்
ஆசை தூண்டுதே
வேற் யாரு என்ற போதும்
என் அன்பு ஒன்று ஏராளமா(ஏராளமா)
உன் தாய் என்று உறவாட
என் தாரம் தாராளமா...
வீடென்ற ஒன்று இன்று
உயிர் கொண்டது உன் மூலமா
நீ தந்த ஆனந்தம்
பார் எந்தன் கண்ணோரமா...
மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி...
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி இனி...
மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி...
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி இனி...
புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ...
உலரும் நாளில்
மழை தூறிடும் ருதுவோ

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Achu

Исполнитель

Tenma

Исполнитель

Dhee

Исполнитель