அச்சமே அகன்றுவிடு இதோ பெண்ணியம் பேசும் ஒரு புதுமை பெண் காதலுக்கு தடை போட்டால் பழைய விழுமியங்களை விட்டு வெளியேறுவோம் என்னும் ஒரு விடுதலை பறவையின் விடுதலை கீதம் ♪ அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு உடம்பு என்ன விறகா நான் உணர்ச்சி இழந்த சருகா உடம்பு என்ன விறகா நான் உணர்ச்சி இழந்த சருகா காதல் என்பது தவறா நான் கல்லில் செய்த சுவரா அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு ♪ தேக்கமடைந்து கிடக்கின்றேன் ஊக்கமிழந்த வாழ்க்கையிலே படுக்கை மேலே சிதறுகிறேன் பாறையில் கொட்டிய பால் போலே தேக்கமடைந்து கிடக்கின்றேன் ஊக்கமிழந்த வாழ்க்கையிலே படுக்கை மேலே சிதறுகிறேன் பாறையில் கொட்டிய பால் போலே துய்க்காத என் இதழை துப்பி தொலையேனோ தூண்டாத என் மார்பை தோண்டி எறியேனோ பாராத என் அழுகை பாயில் புதைப்பேனோ தீராத என் காதல் தீயில் எரிப்பேனோ முன்னோர் பொதியை சுமப்பேனோ இல்லை இன்னோர் விதியை படைப்பேனோ முன்னோர் பொதியை சுமப்பேனோ இல்லை இன்னோர் விதியை படைப்பேனோ அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு ♪ சாத்திர கைதியாகின்றேன் சாதி படைத்த சிறைகளிலே மங்கையாக நான் ஏன் பிறந்தேன் மலையில் முட்டிய நதி போலே சாத்திர கைதியாகின்றேன் சாதி படைத்த சிறைகளிலே மங்கையாக நான் ஏன் பிறந்தேன் மலையில் முட்டிய நதி போலே Africa காட்டில் நான் அணிலாய் பிறப்பேனோ Atlantic கடலோடு ஆரா மீனாவேனோ மலையாள மலையில் நான் மணிக்கிளியாவேனோ மனித பிறவியற்று மனம் போல் வாழ்வேனோ கூட்டு புழுவாய் மரிப்பேனோ இல்லை பட்டுபூச்சியாய் பறப்பேனோ கூட்டு புழுவாய் மரிப்பேனோ இல்லை பட்டுபூச்சியாய் பறப்பேனோ அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு