Kishore Kumar Hits

Vairamuthu - Iruthalai Kolli - Naatpadu Theral - 2 текст песни

Исполнитель: Vairamuthu

альбом: Iruthalai Kolli (Naatpadu Theral - 2)


ஒருதலைக் காதலில் சிக்கிக்கொண்டது
ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு
அது முன்புறமும் சுடுகிறது, பின்புறமும் சுடுகிறது
ஆனால், காதல் நெருப்பு சுகமானது

ஹேய் - ஹெய்யேயேஹே
இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!
இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!
தன்னைத்தானே மலையில் எரியும்
சூரியனைப் போலே!
நானே என்னை எறிந்து கொண்டேன்
நச்செள்ளைக் குள்ளே!
மலையில் விழுந்த சூரியனை
மலைகள் தள்ளுவதில்லை!
அள்ளிக் கொள்ளுவாயோ?
தள்ளிச் செல்வாயோ?
சொல்லிச் செல்லடி நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!

ஹே பட்டாம்பூச்சிதான்
காதல் கிட்டச் செல்ல தத்தித் தாவும்
துரத்தத் துரத்த தூரம் போகும்
ஹே ஹே தூரம் போகும்
ஹே சலவைக்காரி போல்
காதல் இன்பத்தில் என்னை நனைக்கிறதே!
துன்பத்தில் அடித்துத் துவைக்கிறதே!
தனது நிழலில் தான் ஒதுங்காத விருட்சம்போலே!
எனது காதலில் நான் ஒதுங்கவே இடமில்லையே!
அய்யோ காதல்
அமேசான் காடு
உள்ளே நுழைவது எளிது!
வெளியே வருவது கடிது!

ஹே ஹே ஹே
காத்திருப்புதான் காதல்
February முப்பதுக்காக
நட்சத்திரங்களின் விற்பனைக்காக!
விற்பனைக்காக!
ஈக்கள் போன்றது
காதல் கனியிலும் வாயை வைக்கிறதே!
காயத்தின் மீதும் மொய்க்கிறதே!
மொய்க்கிறதே!
காற்று வெளியின் Ozone கூரைக் கிழிசல் போலே!
காதல் கிழித்த இதயம் தைக்கவே வழியில்லையே!
அய்யோ காதல்
அமேசான் காடு
உள்ளே நுழைவது எளிது!
வெளியே வருவது கடிது!
இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!
இருதலைக் கொள்ளி எறும்புக்கு
ஒருதலைக் காதல் வந்ததே!
தன்னைத்தானே மலையில் எரியும்
சூரியனைப் போலே!
நானே என்னை எறிந்து கொண்டேன்
நச்செள்ளைக் குள்ளே!
மலையில் விழுந்த சூரியனை
மலைகள் தள்ளுவதில்லை!
அள்ளிக் கொள்ளுவாயோ?
தள்ளிச் செல்வாயோ?
சொல்லிச் செல்லடி நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!
ஹே - நச்செள்ளை!

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Jency

Исполнитель

Sirpy

Исполнитель