மலர் தான் விழுந்தது குளமே அதிர்ந்தது பனிமேல் நிலவொளி மலர்ந்தது குழந்தை விரல் நுனியிலே பறவை வந்து அமர்ந்ததே கிணற்றிலிருளில் நிலவினொளி வளையல் என மிதந்ததே தூரத்தில் வெளிச்சமாய் தெரியும் நீ யாரோ ஆழத்தில் ஒளிர்கிறேன் அகத்தில் நீ தானோ ♪ பூட்டிக்கொண்ட பனியிலே காற்று வந்து நுழைந்ததே சூடிக் கொண்ட மலரிலே காலம் சென்று அமர்ந்ததே போதுமே ஒரு வரம் போதுமே பூக்குமே கனம் கணம் யாதுமே விண்ணோடும் இல்லை மண்ணோடும் இல்லை உள்ளோடி மலர்ந்தேன் ♪ மலர் தான் விழுந்தது குளமே அதிர்ந்தது பனிமேல் நிலவொளி மலர்ந்தது குழந்தை விரல் நுனியிலே பறவை வந்து அமர்ந்தது இறைமையினை கடந்த நிலை இதயம் இன்று உணர்ந்ததே தூரத்தில் வெளிச்சமாய் தெரியும் நீ யாரோ ஆழத்தில் ஒளிர்கிறேன் அகத்தில் நீ தானோ