சந்திர சூரியர் தீபங்களோ சந்திர சூரியர் தீபங்களோ ஒளி விண்மீன்கள் பிரபையோ கபாலி சந்திர சூரியர் தீபங்களோ ஒளி விண்மீன்கள் பிரபையோ கபாலி ஒரு குடையாக கருநாகம் மனோன்மணி தேவியோ சந்திர சூரியர் தீபங்களோ ♪ தெய்வங்கள் புடைசூழும் பிரகாரம் கண்டேன் கைகூப்பி தொழுது நின்றேன் தெய்வங்கள் புடைசூழும் பிரகாரம் கண்டேன் கைகூப்பி தொழுது நின்றேன் தெய்வானை வள்ளியோடு முருகனைப் பாடும் அருணகிரி அங்கே கண்டேன் நடனம் ஒரு நளினம் தில்லை நடராஜன் சிவகாமியே கபாலம் அதை ஏந்தும் சிவன் அருகினிலே ஒரு மோகினியே துர்கா, கலைவாணி மஹாலக்ஷ்மி பிரம்மன் சண்டிகேசன் தரிசனமே சந்திர சூரியர் தீபங்களோ ♪ விஸ்வநாதர் விசாலாக்ஷி நாகலிங்கம் கண்டேன் பைரவரைப் பார்த்திருந்தேன் விஸ்வநாதர் விசாலாக்ஷி நாகலிங்கம் கண்டேன் பைரவரைப் பார்த்திருந்தேன் ஷங்கரர் வீரபத்ரர் நந்தி தேவன் பிள்ளையார் சட்டைநாதன் நால்வர் கண்டேன் திருமால் அயன் காணா லிங்கோத்பவரும் அங்கு தோன்றினார் மீரா குருமூர்த்தி சூரியன் சேக்கிழார் வேண்டினேன் நாயன்மார் அங்கு அனைவரும் துதி பாடி மகிழும் அருங்காட்சிகள் அதிசயமே சந்திர சூரியர் தீபங்களோ ஒளி விண்மீன்கள் பிரபையோ கபாலி ஒரு குடையாக கருநாகம் மனோன்மணி தேவியோ சந்திர சூரியர் தீபங்களோ ஓ-ஓ-ஓ-ஆ-ஆ-ஆ-அ