Kishore Kumar Hits

Manikka Vinayagam - Arjunar Villu (From "Gilli") текст песни

Исполнитель: Manikka Vinayagam

альбом: Manikkavinayagam - Playback Singer


அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது
எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யாரறிவார்
ஆலம் வேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு

அஞ்சுவது மடம் எஞ்சுவது திடம்
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு விணை ஏத்தி விடு உனை
உன்னுடைய துணையே முந்தானை
இவன் ஒரு அதிசய புலி
இவன் இருப்பதும் நகர்வதும் புலி
அதை அறிந்திடும் பகைவனின் வழி
தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது விடுதலை விடை
அது மழை வெயில் இரண்டிற்கும் குடை
ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு

தேவதையின் ரகம் வெண்ணிலவு முகம்
மூடியது ஏனோ கார்மேகம்
தேடல் ஒரு கண்ணில் ஊடல் ஒரு கண்ணில்
நாளை இரு கண்கள் சுகமாகும்
அழகிய தாய் மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல்
அழகிய மெழுகென உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல்
ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு

அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Deva

Исполнитель