Kishore Kumar Hits

Harish Raghavendra - Idhu Porkalama (From "7/G Rainbow Colony") текст песни

Исполнитель: Harish Raghavendra

альбом: Hits of Harish Ragavendra & Madhubalakrishnan


இது போர்களமா
இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே
இது போர்களமா
இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே
தீயின் மனமும்
நீரின் குணமும்
தெளித்து செய்தவள் நீ நீயா
தெரிந்த பக்கம் தேவதையாக
தெரியா பக்கம் பேய் பேயா
நேரம் தின்றாய்
நினைவை தின்றாய்
என்னை தின்றாய் பிழை இல்லயா
வேலை வெட்டி
இல்லா பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா
இரு விழி உரசிட
ரகசியம் பேசிட
இடி மழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம்
நாபிக்கமலம்
பற்றி கொண்டதும் பேரின்பம்
தகதகவென எரிவது தீயா
சுடசுடவென தொடுவது நீயா
தொடு தொடு வென சொல்லுகின்றாயா
கொடு கொடு வென கொல்லுகின்றாயா
நண்பர் கூட்டம்
எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னை
காண்பேன் என்றே
நீண்ட இரவை பொறுக்கின்றேன்
இப்படி இப்படி
வாழ்க்கை ஓடிட
இன்னும் என்ன செய்வாயோ
செப்படி வித்தை
செய்யும் பெண்ணே
சீக்கிரம் என்னை கொல்வாயோ
எந்த கயிறு உந்தன் நினைவை
இறுக்கி பிடித்து கட்டுமடி
என்னை எரித்தால்
எலும்பு கூடும்
உன் பேர் சொல்லி அடங்குமடி
பட பட வென படர்வதும் நீயா
விடு விடு வென உதிர்வதும் நீயா
தட தட வென அதிர வைப்பாயா
தனிமையிலே சிதற வைப்பாயா
இது போர்களமா
இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Tippu

Исполнитель