Kishore Kumar Hits

Harish Raghavendra - Kanaa Kaanum (From "7/G Rainbow Colony") текст песни

Исполнитель: Harish Raghavendra

альбом: Hits of Harish Ragavendra & Madhubalakrishnan


கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ?
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ?
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்
உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவா இனி மழை வரும் ஓசை ஆ...
கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ஓஹோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேர் என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ
தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே
ஆஆஆ
கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ?

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி வேலை அழைக்கிறதே
அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன்
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிக கொடுமை
ஆஆஆ
கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ஓஹோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ?

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Tippu

Исполнитель