Kishore Kumar Hits

Siddharth - Kaarigai Kanne текст песни

Исполнитель: Siddharth

альбом: Aval


ஓ அழகே...
வா... அருகே
காரிகை கண்ணே
நாணமும் பெண்ணே
மூலிகை முத்தம் தரவா
தேன் ஊற
மேனியில் மிச்சம் தேடுதே
நெஞ்சம் ஏனடி அச்சம்
வருவாயோ தீர
தாகம் தேடும் மாயம்
தானாக ஓடும் ஓடும்
தாபங்கள் நாளும் நாளும் தீராததோ
காதல் மோகம் மேலும்
மாறாமல் தூறும் தூறும்
காலங்கள் போக போக மாறாததோ
ஓ அழகே...
வா... அருகே
காரிகை கண்ணே

நீ தழுவ நான் அகம் மகிழ
தீ பரவி ஓடும்
அதில் நான் உருகவே என்னை பருக
நீ அருகில் வேண்டும்
நீ முயல நான் சுகம் பயில
நாம் விலகினாலும்
புது நீர் அருவி போல்
விரல் நுனிகள்
பூ மலர தூண்டும்
மோதா மேகமாக
தீண்டா வானிலை
தேவை ஏதும் இல்லை
போரே வேண்டும்
கானா வேதமாக
நாளும் தோன்றுதே
போதை போல வந்து
நோயை தூண்டும்
ஆறாத ஆசை
கூடல் ஆதாரமாக
அடி தானாக நீரும் வேரும் போராட
பேசாத மூச்சும் கூட
காதோடு பேச
இது போதாது மேலும் மேலும்
நேரம் நீளாதோ
நீ துணிய துணிய வழி தேடி தேடி
இளமை இளமை தேங்க
நான் கனிய கனிய விதி தாண்டி தாண்டி
இனிமை இனிமை தூண்ட
வான் விடிய விடிய விழி தூங்கினாலும்
உதடு உறவு வேண்ட
தேன் வழிய வழிய இனி மீண்டும் மீண்டும்
வருடி வருடி ஏங்க
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தேகம் தேடி ஓட
பாகம் பாகமாய்
தோளில் சீறும் வேகம்
மேலும் கூட
ஏதோ வாதமாக
வாழும் நேரமோ
மாறும் மாயமாக
காலம் போக
வேர்வைகள் தீண்டி தீண்டி பாலங்கள் போட
அட காற்றுக்கு பாதை இல்லை நீராட
நாளங்கள் கூடி கூடி பாதங்கள் கூச
இனி நானாக மேலே ஏறும் ஏணி நீதானோ ஓஓஓ
ஓ காரிகை கண்ணே
நாணமும் பெண்ணே
மூலிகை முத்தம் தரவா தேன் ஊற
மேனியில் மிச்சம்
தேடுதே நெஞ்சம்
ஏனடி அச்சம் வருவாயோ தீர
தாகம் தேடும்
மாயம் தானாக ஓடும் ஓடும்
தாபங்கள் நாளும் நாளும் தீராததோ
காதல் மோகம் மேலும்
மாறாமல் தூறும் தூறும்
காலங்கள் போக போக மாறாததோ
ஓ அழகே...
வா... அருகே
பொடி தூவாமலே
நெடியோ ஏறுதே
நொடி வீணாவது பிழையாய் ஆனதே
பிரியா வேளையில்
சுவையோ கூடுதே
வழியை தேடவே வறுமை தீறுதோ
ஓஹோ
ஹ்ம்ம் ம்ம்ம்
நீ துணிய துணிய வழி தேடி தேடி
இளமை இளமை தேங்க
நான் கனிய கனிய விதி தாண்டி தாண்டி
இனிமை இனிமை தூண்ட
வான் விடிய விடிய விழி தூங்கினாலும்
உதடு உறவு வேண்ட
தேன் வழிய வழிய இனி மீண்டும் மீண்டும்
வருடி வருடி இதழ் ஏங்க ஏங்க தா

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Sagar

Исполнитель