மாயோனே மணிவண்ணா
மாலோனே மாதவனே
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
மாயோனே மணிவண்ணா
சத்ய ஸ்வரூபா நித்ய ப்ரகாசா
சத்ய ஸ்வரூபா நித்ய ப்ரகாசா
♪
நேர்மையற்ற நெறியிள்ளார்
நிமிர்ந்தே உலவுவதோ
நேர்மையற்ற நெறியிள்ளார்(ஆ...)
நிமிர்ந்தே உலவுவதோ
நின்னை தொழும் நின் அடியார்
தளர்ந்தே தாழ்ந்திடவோ
நின்னை தொழும் நின் அடியார்
தளர்ந்தே தாழ்ந்திடவோ
அன்றும் இன்றும் என்றென்றும்
நடப்பதென்ன இதுதானே
உனக்கு இது சரிதானே
நீ விதித்து வைத்த விதிதானே
உனை மீறி புவிமீதோர்
அணுவும் அசையாது
உன் மனம் எதுவோ அது செய்
எமது குறையை உனக்குறப்பது எவரோ
மாயோனே மணிவண்ணா
க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனே
சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே
க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனே
சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே
நித்திரையில் இருந்தாலும் ஆ...
நித்திரையில் இருந்தாலும்
அத்தனையும் அறிவாயே
துக்கம் எமை தொடராமல்
தொட்டணைத்து காப்பாயே
தீயோரை திருத்தாது திருப்ணியேற்கின்றாய்
கோயில் செல்வம் கொள்ளை போக
தடுத்திடாமல் படுத்து கிடைப்பதலழகோ
மாயோனே மணிவண்ணா
மாலோனே மாதவனே
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
ஆ... மாயோனே ஆ...
நாராயணா நாராயணா
கிருஷ்ணாய கோவிந்த நாராயணா
நாராயணா
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя