(அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல்) காலம் தான் தாண்டி போனாலும் காயம் தான் ஆறாது பெண்ணே காதல் தான் மாண்டு போனாலும் கனவெல்லாம் நீதானே பெண்ணே பெண் இதயம் படுகுழி என்றாலும் ஆழம் தான் அறிந்தவர் யார் இங்கே மலையாய் நீ கண்ணீர் விட்டாலும் உன் கண்ணீர் துடைப்பார் யார் இங்கே சிறகெல்லாம் உடைந்த நிலையில் சிறை ஒன்று எதற்கு என்பேன் பார்வை தான் இழந்த நிலையில் பாதை தான் கறுப்பு என்பேன் இது என்ன கிரகம் மனதில் நித்தம் என்னுள் மரணம் என் வயதோ அறியா பருவம் நான் வரைந்தது உன் திருஉருவம் நான் சொல்ல முடியாத துன்ப துயர் தாண்டி பாதை அறியாத சின்னம் சிறுசாகி தன்னந்தனியாக தட்டுத்தடுமாறி சிந்தைகறியாது நித்தம் உனை தேடி இனம் புரியாதொரு மாற்றம் நான் கண்டது வெருமனே ஏமாற்றம் நீ போட்டது எல்லாம் வெளிவேஷம் என் இளமைக்கு வந்த ஒரு போராட்டம் நான் தனியே தவிக்க உன்ன நினச்சு உருக தினம் கண்ணீர வடிக்க நானும் செத்து பிளைக்க என் மனசு வலிக்க தினம் தண்ணி அடிக்க கொஞ்சம் கிறுக்கு பிடிக்க நானும் இருளில் நடக்க உன்னை குற்றம் கூற எனக்கு ஆசையில்லை என் மனசை விட்டு வலி போகவில்லை நான் நித்தம் எழுத ஒரு பாடல் இல்லை உன்னை எழுத எழுத வரி போதவில்லை பூ மீது நீயும் நடக்க தீ மீது நானும் நடக்க சிலையாக நானும் வடிக்க சிலுவையிலே நீயும் அடிக்க இதழை நான் தொட்டு பறிக்க வேரோடு என்னை சரிக்க அன்பே நீ என்னை மறக்க நான் இங்கே உலகை வெறுக்க வலி மட்டும் மீதமா இல்லை காதல் செய்தால் பாவமா விழி மட்டும் ஈரமா இது நினைக்க நினைக்க கீதமா கடவுள் கூட இப்ப பூமி வந்தால் இங்க தாடி மட்டும் தான் மிச்சம் குரங்கு கையில் ஒரு மாலை போல தான் வாழ்க்கை கழியுது தான் மிச்சம் என்ன சொன்னாலும் மாற்ற முடியாது வளையும் வால தான் நிமித்த முடியாது கிழக்கு சூரியன் தெற்க்கில் உதிக்காது கழுதை என்றும் ஒரு வாசம் அறியாது கடந்த காலத்தில மறந்து போச்சு நடந்த நாடகம் முடிஞ்சு போச்சு வந்த பாதையும் மறந்து போச்சு நம் காதல் கருகி இப்ப வருஷமாச்சு (அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல் அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல்)