Kishore Kumar Hits

Gpkism - Kenosis текст песни

Исполнитель: Gpkism

альбом: Illuminatum


ஜெய ஜெய தேவி
ஜெய ஜெய தேவி
துர்க்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி
ஜெய ஜெய தேவி
துர்க்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)
பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டும் வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் ௧ண்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய் போல் நம்மை காப்பவளே
(ஜெய ஜெய தேவி)
சங்கு சக்கரம் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா...
தங்க கைகளில் தாங்கி நிற்பாள்
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்அவளே
அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி
ஜெய ஜெய தேவி
துர்க்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி
ஜெய ஜெய தேவி
துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம்...

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

BLOOD

Исполнитель

Kaya

Исполнитель

Kozi

Исполнитель