Kishore Kumar Hits

Pranav Das - Pagal Iravai | Maraigirai текст песни

Исполнитель: Pranav Das

альбом: Pagal Iravai | Maraigirai


காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா...
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்

ஜன்னல் வந்த நிலவே
கண்ணில் நின்ற கனவே
மஞ்சம் சேர்ந்த உறவே
நம்மில் இல்லை பிரிவே
அணை தாண்டும் வெள்ளத்தில்
என் கண்ணில் கட்டி வைத்தேன்
அணையாத தீபம் போல்
உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்
என் ஜீவன் தருவேன்
உயிர் ஒளி நீ அணைவதில்லை
மறைவதில்லை... ஆஅ... ஆ...
காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா...
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே...

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители