வீரன் உன் கண்ணு பட
ஒத்தையில சரிஞ்சிபுட்டேன்
என்னடி பொன்னியம்மா
ஏன்டி சொல்லடி பொன்னியம்மா
சீறும் உன் சத்தம் கேட்டு
கித்தாப்பெல்லாம் தொலச்சிபுட்டேன்
ரத்தின முத்தழகா
என்னடா ரத்தின முத்தழகா
பேசாம பைய வந்து
நெஞ்சாங்கூட்ட நிறச்சிட்ட
வெரசா தான் வேசம் கட்டி
சுருண்டு புட்டேன் பாத்துக்க
மலை உச்சியம்மா
தல சுத்துதம்மா
உசற ஏறி கிறங்கி கிடந்த
உசிர வாட்டுற
♪
ஏ தாட்டியந்தான் பண்ணாத
வீராப்ப காட்டாத
பூசாம பேசாம
பிச்சி பிச்சி தின்னாத
நரச்சா கூட
என்ன வச்ச கண்ண வாங்காம
நில விரியும் சுருக்கம்
என்ன கொண்டே போடுமே
சாமி சத்தியமா
இந்த வட்டாரமே திரும்பி பாக்க
கிறங்கி கிடந்த உசிர வாட்டுற
♪
மாடத்தி என்ன மா நிறத்தால
கனமா பின்னி கட்டி போடுற
ஓடுற நானும் ஓய்வெடுத்தேனே
கலையும் சீல சுண்டி இழுக்குதே
அட கட்டாந்தர பட்டினியா
தூக்கங் கெட்ட நானும்
கூட்டாஞ்சோறா கூடிகிட்டு
மடி சாயுறேன்
கூரக்குள்ள பொட்ட புள்ள
கூடி வந்த நேரம்
கத்துக்குட்டி காதல் ஒண்ணு
கருவாகுதே
என் காட்டு ராசா
தறி கெட்டு லேசா
சருக போல
மயங்கி விழுந்த மனச தாங்குற
நீ மயங்கி விழுந்த மனச தாங்குற
நீ மயங்கி விழுந்த மனச தாங்குற
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя