Kishore Kumar Hits

Giftson Durai - Oru Ganam текст песни

Исполнитель: Giftson Durai

альбом: Oru Ganam


நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்
ஓராயிரம் கனவுகள்
கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன்
மனதின் தீரா ஆசைகள்
ஆசைகள் நூறு இருந்தாலும்
என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்
என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்
அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன்
நீரே இணைபிரியாத நண்பன்
என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்
என் மறையும் நினைவுகள் அனைத்திலும்
என் மனதை விட்டு நீங்காத புது பாடல்
என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்
என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்
ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்
என் தாளம் நீர் ஓ... ஓ.
எத்தனை முறை என் இதயம் நொறுங்கினாலும்
அத்தனை முறையும் உம்மிடம் வருகிறேன்
உம் கைகள் குத்தும் என்று உணர்ந்தும்
உடைந்த சுவடுகள் உம்மிடம் கொடுக்கிறேன்
ஆசைகள் நூறு இருந்தாலும்
என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்
என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்
அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன்
நீரே இணைபிரியாத நண்பன்
என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்
என் மறையும் நினைவுகள் அனைத்திலும்
என் மனதை விட்டு நீங்காத புது பாடல்
என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்
என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்
ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்
என் தாளம் நீர் ஓ... ஓ.

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители